கோவில்பட்டியில் இலவச மருத்துவ முகாம்
கோவில்பட்டி அத்தை கொண்டான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
திருநெல்வேலி பொருநை மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை மருத்துவர் சிதம்பர தானு,எலும்பு முறிவு மருத்துவர் பால சுகுமார்,மகளிர் மருத்துவம் மருத்துவர் மோனிகா,பொது மருத்துவம் மருத்துவர் நாபூல்ஆகியோர் கலந்து கொண்டு 150க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்தனர்.

முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்..
ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ்,முன்னாள் உதவி ஆளுநர்கள் சீனிவாசன்,முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பழனிக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன் கலந்து கொண்டு பொது மருத்துவ முகாமினை தொடக்கி வைத்து பேசினார். சங்க நிர்வாகிகள் கண்ணன்,முத்து முருகன், பூல்பாண்டி, ராஜேந்திரன், நடராஜன், அருண்,கம்மவார் சங்க தலைவர் மாரிச்சாமி, செயலாளர் ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ரோட்டரி சங்க பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.







