கோவில்பட்டி யில் நடுரோட்டில் சண்டை: போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் சஸ்பெண்ட்
கோவில்பட்டி போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செல்வகுமார் (வயது 36). மற்றும் பெண் போலீசாக பணியாற்றி வந்த இந்திராகாந்தி (32) ஆகியோர் கடந்த மாதம் 17 ம் தேதி நடுரோட்டில் சண்டையிட்டனர்.
பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் திருச்செந்துாருக்கும், பெண் போலீஸ் இந்திராகாந்தி புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, இந்திரா காந்தியை செல்போனில் தொடர்பு கொண்டு, செல்வகுமார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இந்திராகாந்தி புகார் அளித்தார்.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹாசி மணி நேற்று உத்தரவிட்டார்.
இதேபோல, நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, பெண் போலீஸ் இந்திரா காந்தியை சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.







