அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது; தமிமும் அன்சாரி குற்றச்சாட்டு
தூத்துக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமும் அன்சாரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை அழித்தால் தான் தங்களது எதிர் கால அரசியல் இருப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் பாஜக இருக்கிறது அதன் முதல் நிலைப்பாடு அதிமுக, ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவை தொட கூட முடியவில்லை.
அவர் இறந்த பின்பு அதிமுகவின் தற்போது இருக்கக்கூடிய தலைமைத்துவ பலவீனத்தை பயன்படுத்தி கொண்டு கட்சியை சின்னாபின்னம் ஆக்கக்கூடிய எல்லா வேலையும் பாஜக செய்து வருகிறது.
அந்த கட்சியை தங்கள் தேவைக்காக பலவீனப்படுத்துகிறார்கள் தலைவர்களை பிரிக்கிறார்கள் தங்கள் தேவைக்காக ஒன்று சேர்க்க வேண்டும் என செங்கோட்டையனை உயர்த்துகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி சுற்று பயணம் செய்து வருகிறார் அது பாரதிய ஜனதாவிற்கு பிடிக்கவில்லை அவர் அதிமுகவில் பலம் பெறுவதை பொறுத்துக் கொள்ளாமல் தங்களது பேரத்திற்கு பணிய மாட்டார்கள் என அச்சுறுத்தலிலும் பலவீனத்திலும் வைத்திருக்க வேண்டும் என செங்கோட்டையனை கையில் எடுத்திருப்பதாக கருதுகிறோம்.

நாம் இருக்கக்கூடிய இந்தியா கூட்டணி திமுக ஆட்சியில் இருக்க வேண்டும் எதிர்க்கட்சியாக அதிமுக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் அப்படி இருக்கும்போது ஒரு திராவிட கட்சி அழிவது, பலவீனப்படுவதை யாரும் விரும்பவில்லை.
அதிமுகவின் தலைமையும் நிர்வாகிகளும் இதை உணர வேண்டும். தொன்டர்களிடம் அந்த கருத்து இருக்கிறது கட்சி பலகீனப்படுத்தியது குழப்பத்தை ஏற்படுத்தியது யார் என்று அனைவருக்கும் தெரியும்.
இது அதிமுக தலைமை உணர்ந்து கொண்டு புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.
எங்கெல்லாம் பாஜக கூட்டணி வைத்திருக்கிறது அங்கே எல்லாம் கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தியிருக்கிறது மகாராஷ்டிராவில் சிவசேனாவை பின்னுக்கு தள்ளியது. நிதிஷ்குமார் நிலை பலகீனமாகிவிட்டது, ஒடிசாவில் நவீன் பட்நாயக்கை பலகீனமாக்கிவிட்டனர்.அதேபோல் தான் அ.திமுகவும் இருக்கிறது.
இவ்வாறு தமிமும் அன்சாரி தெரிவித்தார்.







