சர்வதேச கழுகுகள் தின விழா
Oplus_16908288
நாடு முழுவதும் செப்டம்பர் முதல் சனிக்கிழமை அன்று,அழிந்து வரும் கழுகு இனங்களை பாதுகாக்கவும்,சுற்றுச்சூழலில் கழுகு பங்களிப்பு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச கழுகுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் உள்ள கொண்டைய ராஜு ஓவிய பயிற்சி பள்ளியில் நடந்த கழுகுகள் தின விழா நடைபெற்றது.
விழாவில் ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் கழுகு உருவ படத்திற்கு வண்ணம் தீட்டி கழுகு இனங்களை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
ஓவிய பயிற்சிபள்ளி நிர்வாகி முருகபூபதி,சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி சங்க செயலாளர் பழனிகுமார் அனைவரையும் வரவேற்றார்.
கழுகுவின் படத்திற்கு வண்ணம் தீட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கண்ணன், நடராஜன், கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பூல்பாண்டி நன்றி கூறினார்.







