கோவில்பட்டியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீடியோ வெளியிட்டவர் கைது
.கோவில்பட்டி இலுப்பையூரணி காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவர், சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தார். பின்னர் அதை வீசி வெடிக்கச் செய்து, அந்தக் காட்சியை வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது,
மேலும் சமூக வலைதளத்தில் இளைஞா்கள், இளஞ்சிறாா்களை சோ்த்து அரிவாள், வாள்களை வைத்து ரீல்ஸ் எடுத்து அதை பதிவிட்டு பொதுமக்கள் மத்தியில் பதற்றம், அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்தது,

இதை தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி இலுப்பையூரணியை சோ்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் குமார் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க மூலப்பொருட்கள் எங்கு கிடைத்தன, இதற்கு உதவி செய்தவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.







