கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். கோவில்பட்டி நகர்மன்ற தலைவர், திமுக நகரச் செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். முகாமில், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சிவக்குமார், இணை இயக்குநர் (நலப்பணிகள்) பிரியதர்ஷினி, மாவட்ட காசநோய் துணை இயக்குநர் சுந்தரலிங்கம், மாவட்ட தொழுநோய் அலுவலர் யமுனா மற்றும் 50-க்கும் மேற்பட்ட […]
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க கோவில்பட்டி வட்டக்கிளை மாநாடு நடந்தது. காந்தி மண்டபத்தில் நடந்த மாநாட்டுக்கு வட்டத் தலைவர் சிந்தா மதார் பக்கீர் தலைமை தாங்கினார்.. துணைத் தலைவர் செல்லச்சாமி முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் செ.நாயகம் வரவேற்றார். செயலாளர் சுதாகர் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் பென்னுராஜ் நிதி அறிக்கையை வாசித்தார். மாவட்டத் தலைவர் சாம்பசிவம், மாவட்டச் செயலாளர் முத்தையா, மாவட்ட பொருளாளர் கண்ணையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுச் […]
தீயணைப்பு ஆணையத் தலைவராக டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீராஜ்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சங்கர் ஜிவால் நாளை மறுநாளுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்கு புதிய பொறுப்பானது அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 35 ஆண்டுகள் சங்கர் ஜிவாலின் காவல்துறை அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. காவல் துறை ஆணையம் போல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு புதிய ஆணையம் […]
அமெரிக்காவுக்கு அனுப்பிய 500 டன் கடல் உணவை பாதிவழியில் திருப்பி அனுப்பிய இறக்குமதியாளர்கள்
கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தமிழக நிர்வாகி செல்வின் பிரபு தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- அமெரிக்கா இந்திய இறக்குமதி பொருளுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி பெரும் அளவு பாதிக்கப்படும். இந்தியாவில் இருந்து அதிகப்படியான கடல் உணவு அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது. இதில் இறால் மீன் பெரிய பங்கு வகிக்கிறது. இறால்மீன் பல மீனவர்களின் வாழ்வாதாரம். பல பண்ணை இறால்தொழிலாளர்கள், பண்ணை இறால் விவசாயிகள் அனைவரும் இதனால் பாதிக்கப்படுவர்.இவ்வளவு […]
நெல்லையை அடுத்த மணிமூர்த்தீஸ்வரம், வாழவந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் லட்சுமி நாராயணன் (வயது 18). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவரது மகன் ஆகாஷ் (18). லட்சுமி நாராயணனும், ஆகாசும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்து வருகின்றனர். இருவரும் நட்புடன் பழகி வந்தனர். நேற்று பல்கலைக்கழகத்திற்கு இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது வகுப்பறைக்குள் செல்லாமல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தனர். […]
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் ஆகஸ்டு மாதத்திற்கான மாதாந்திர பராமரிப்பு பணிகள் 30-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சப்ளை தடை செய்யப்படும். அந்த இடங்கள் வருமாறு:- கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம், […]
முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி: கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி பள்ளிக்கு வெண்கல பதக்கம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி மாவட்டம் நடத்திய முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி அளவிலான மகளிர் கபடி போட்டியில் கோவில்பட்டி நகராட்சி உயர்நிலைப் பள்ளி வெண்கலப் பதக்கம் பெற்றது, வெற்றி பெற்ற பள்ளி வீராங்கனைகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் முனைவர் கரிகாலன் ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ என்ற படத்தில்நடித்து வருகிறார். இது அவரது 35-வது படம் ஆகும்.நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான […]
வெளிநாடுகளுக்கு கடல் உணவு ஏற்றுமதியில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2023-24-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பதப்படுத்தப்பட்ட இறால், மீன், கணவாய், நண்டு உள்ளிட்டவை அடங்கும். 2023-24-ம் ஆண்டில் ரூ.60 ஆயிரத்து 523 கோடி மதிப்பிலான 17 லட்சத்து 81 ஆயிரத்து 602 டன் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. அமெரிக்காவுக்கு […]
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம் நடந்தது. சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். முகாமில், அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில், பட்டா பெயர் மாற்றம், மின்வாரிய இணைப்பில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு, சம்பந்தப்பட்ட மக்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது. முகாமில், சார் ஆட்சியர் ஹூமான்சூ மங்கள், வட்டாட்சியர் […]







