கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாநாடு

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க கோவில்பட்டி வட்டக்கிளை மாநாடு நடந்தது. காந்தி மண்டபத்தில் நடந்த மாநாட்டுக்கு வட்டத் தலைவர் சிந்தா மதார் பக்கீர் தலைமை தாங்கினார்..
துணைத் தலைவர் செல்லச்சாமி முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் செ.நாயகம் வரவேற்றார். செயலாளர் சுதாகர் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் பென்னுராஜ் நிதி அறிக்கையை வாசித்தார்.

மாவட்டத் தலைவர் சாம்பசிவம், மாவட்டச் செயலாளர் முத்தையா, மாவட்ட பொருளாளர் கண்ணையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுச் செயலாளர் பர்வதராஜன் சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில், மாநில அரசின் தேர்தல் வாக்குறுதியான 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கம்யூட்டேசன் தவணை பிடித்த காலத்தை 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







