கோவில்பட்டி: `நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமில் 1700 பேருக்கு பரிசோதனை
கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கோவில்பட்டி நகர்மன்ற தலைவர், திமுக நகரச் செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். முகாமில், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சிவக்குமார், இணை இயக்குநர் (நலப்பணிகள்) பிரியதர்ஷினி, மாவட்ட காசநோய் துணை இயக்குநர் சுந்தரலிங்கம், மாவட்ட தொழுநோய் அலுவலர் யமுனா மற்றும் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களை பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கினர்.

முகாமில், முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்கு வசதியாக, கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உடனுக்குடன் வருமான சான்றிதழ்களை வழங்கினர்.
மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று உடனடியாக வழங்கப்பட்டு, அவர்களுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்.

அதே போல், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளி துறை நல அலுவலர் பிரம்மநாயகம், திமுக கிழக்கு நகரச்செயலாளர், நகர் மன்ற உறுப்பினர் சுரேஷ் , பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர், சிவா,ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், ஜெயகண்ணன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணை சேர்மன் மகாலட்சுமி சந்திரசேகர், கோவில்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா, செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு வக்கீல் பழனிக்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி நகரம், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 1700 பேர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் பெற்றனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் வித்யா விஸ்வநாதன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.







