திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர். அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோர் சந்தித்தனர். அப்போது தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட கோரிக்கை வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முத்தரசன், சண்முகம், திருமாவளவன் ஆகியோர் கூட்டாக […]
பால புரஸ்கார் சாகித்திய அகாடமி விருது: விஷ்ணுபுரம் சரவணனுக்கு கோவில்பட்டியில் பாராட்டு விழா
`ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற புத்தகத்திற்கு பால புரஸ்கார் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு கோவில்பட்டி கி.ரா.மணிமண்டபத்தில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (த.சி.எ.க.ச). தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உருவச் சிலைக்கு விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.மாநிலத் தலைவர் எழுத்தாளர் உதயசங்கர் தலைமை தாங்கினார்,எழுத்தாளர் உதயசங்கர் குழந்தைகளுக்காக எழுதிய […]
கோவில்பட்டி மதித்தோப்பு ரோடு லெனின் நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 48வது ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு நாட்கால் நடுதல் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கற்பக விநாயகர், முத்துமாரியம்மன், வீர கருப்பசாமிக்கு மாபொடி, மஞ்சள்பொடி, பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள்,அலங்காரம், தீபாராதனை மற்றும் நாட்காலுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜைகளை சுப்ரமணிய சுவாமி,சந்துரு சாமி செய்தனர்.
தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தகவல்தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சித்துறையால் 2015ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் “தமிழ்ச் செம்மல்” விருது வழங்கப்பட்டு வருகிறது’ அவ்வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து […]
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மகேந்திரன். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரான இவருக்கு உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் மூங்கில்தொழுவு பகுதியில் தோட்டம் உள்ளது. தென்னை மரங்கள் அதிகமுள்ள இந்த தோட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் மூர்த்தி என்பவரின் குடும்பம் அங்கேயே தங்கியிருந்தது.தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை , மகன் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுபற்றி பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள், அவசர போலீஸ் 100 க்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ரோந்துப் […]
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐ.டி.ஊழியர், கடந்த 27ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ண குமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. […]
தூத்துக்குடி மாவட்டம் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்கத்தின் சார்பாக கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் சிசி திருமண மண்டபத்தில் நடந்தது. கண் குறைபாடுகள் கண்டறிதல் கிட்ட பார்வை, தூர பார்வை சரிபார்த்தல் கண் பவர் செக்கப் பண்ணுதல் நடைபெற்றது.முகாமில் சங்கத் தலைவர் கண்ணன்,செயலாளர் ரங்கராஜ்,பொருளாளர் முத்துராஜ்,சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 80 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான கவின், கடந்த மாதம் 27 அன்று நெல்லையில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரைக் கொலை செய்ததாக சுர்ஜித் என்ற இளைஞர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். சரணடைந்த சுர்ஜித், கவின் காதலித்து வந்த பெண்ணின் சகோதரர் என்பதும், கவின் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரைக் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை […]
அகில இந்திய 15வது ஆண்டு ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஆகஸ்ட் 12 முதல் 23 வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் தமிழக ஜூனியர் ஆண்கள் அணி கலந்து கொண்டு விளையாட இருக்கிறது. இதற்காக தமிழக ஜூனியர் அணிக்கான தேர்வு கோவில்பட்டியில் கடந்த மாதம் 23 முதல் 27 -ந்தேதி வரை கோவில்பட்டியில் நடைபெற்றது. ஜூனியர் ஆண்கள் மாநில சாம்பியன் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஆக்கி யூனிட் ஆப் […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வௌியான தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தங்கள் தாயகத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க 30 ஆண்டு காலம் மறப் போராட்டத்தை நடத்திய ஈழத் தமிழ் மக்கள் அதற்காக கொடுத்த விலை அதிகம். லட்சக்கணக்கான மக்கள் சிங்கள இன வெறி […]







