இலவச கண் சிகிச்சை முகாம்
தூத்துக்குடி மாவட்டம் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்கத்தின் சார்பாக கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் சிசி திருமண மண்டபத்தில் நடந்தது. கண் குறைபாடுகள் கண்டறிதல் கிட்ட பார்வை, தூர பார்வை சரிபார்த்தல் கண் பவர் செக்கப் பண்ணுதல் நடைபெற்றது.முகாமில் சங்கத் தலைவர் கண்ணன்,செயலாளர் ரங்கராஜ்,பொருளாளர் முத்துராஜ்,சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 80 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது







