அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக் கொலை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மகேந்திரன். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரான இவருக்கு உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் மூங்கில்தொழுவு பகுதியில் தோட்டம் உள்ளது.
தென்னை மரங்கள் அதிகமுள்ள இந்த தோட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் மூர்த்தி என்பவரின் குடும்பம் அங்கேயே தங்கியிருந்தது.தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை , மகன் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதுபற்றி பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள், அவசர போலீஸ் 100 க்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (SSI) சண்முகவேல் அங்கு வந்தார்,

தந்தை, மகன் சண்டையை பிரித்து ஆம்புலன்சில் அனுப்பி வைக்க சண்முகவேல் ஏற்பாடு செய்தார். ஆனால் மதுபோதையில் இருந்த தந்தை, மகன்கள் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.
தலைமறைவான தந்தை மூர்த்தி, மகன்கள் தங்கப்பாண்டியன் மற்றும் மணிகண்டனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் போலீசார் விரைந்து சென்று, சண்முகவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே காவல்துறை ஜீப் ஓட்டுநர் அழகுராஜா வுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது,.

தோட்டத்தில் சமீபத்தில் தந்தை-மகன் பணிக்குச் சேர்ந்திருப்பதாகவும், அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று தனக்குத் தெரியாது என்றும் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.







