அகில இந்திய ஜூனியர் ஆக்கி: தமிழக அணி வீரர்களுக்கு கோவில்பட்டியில் தீவிர பயிற்சி
அகில இந்திய 15வது ஆண்டு ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஆகஸ்ட் 12 முதல் 23 வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் தமிழக ஜூனியர் ஆண்கள் அணி கலந்து கொண்டு விளையாட இருக்கிறது. இதற்காக தமிழக ஜூனியர் அணிக்கான தேர்வு கோவில்பட்டியில் கடந்த மாதம் 23 முதல் 27 -ந்தேதி வரை கோவில்பட்டியில் நடைபெற்றது.

ஜூனியர் ஆண்கள் மாநில சாம்பியன் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி தலைவர் சேவியர் ஜோதி சற்குணம், முன்னால் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின், ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்துள்ளது.
தமிழக அணிக்கான 49 வீரர்கள் பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டு ஒரு வாரமாக கோவில்பட்டி செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நேற்று 24 வீரர்களை அடுத்த கட்ட பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் வருமாறு:-

‘ கோல்கீப்பர்: கார்த்திகேயன் , சுமன், விஷால்
தடுப்பு ஆட்டக்காரர்கள்:மணிமாறன், குபேரன், தனுஷ் பாண்டியன், ராகுல், சுபாஷ், சுகுமார், ஸ்ரீனிவாசன், அருண், அழகு மோகன பிரியன், கௌதம், மாதேஷ், கனிஷ்குமார், ராகுல்ராஜ்.
முன்கள ஆட்டக்காரர்கள்: விஷால், நந்தகுமார், அபிஷேக், பிரவீன், ஆகாஷ் ,விஷ்வா, அதிபன், பிரஜின்.
இவர்களுக்கான பயிற்சி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது தலைமை பயிற்சியாளராக முத்துக்குமார் துணை பயிற்சியாளராக சாமுவேல் ராஜ்குமார் அணி மேலாளராக வேல்ஸ் வித்யாலயா பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேந்திரன் ஆகியோர் செயல்படுகின்றனர்







