• October 23, 2026

Month: July 2025

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மோசமான மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  ஆர்ப்பாட்டம்  

கோவில்பட்டி 20-வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு பஜாரில் உள்ள மோசமான மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அந்த மின்கம்பங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கிளைச் செயலாளர் செல்லையா தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், உதவி செயலாளர்கள் விஜயலட்சுமி, அலாவுதீன், இளைஞர் பெருமன்ற நகர குழு உறுப்பினர் விநாயகா மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டு மோசமான நிலையில் காணப்படும் மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

செய்திகள்

வைகோ மீது சாதி முலாம் பூசும் தீய சக்திகள்; மதிமுக இளைஞர் அணி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இளைஞர் அணி சங்கொலி சந்தா வழங்குதல், மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் கூட்டம் மற்றும் தலைமைக் கழகம் தாயகத்தில் மாநில இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது. மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ச.இசக்கியப்பன், ஆர்.இரத்தினசாமி, அ.பெரியார், சி.பூப்பாண்டி, மு.மாரிமுருகன், ஜெ.சிவராமன், ப.தினேஷ், டி.கே.சரவணன், தமிழீழ சோமு, எம்.டி.சி. சங்கையா, பி.ஆர்.முருகன், டி.தியாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுக  முதன்மைச் செயலாளர் துரை […]

கோவில்பட்டி

ரோந்து வாகனம் விபத்தில் சிக்கி போலீஸ்காரர் பலி; சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4  பேர்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு போலீஸ் எல்லை பகுதியிலும் இரவு நேர ரோந்து போலீசுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு வாரமும் இந்த பட்டியல் மாற்றி அமைக்கபப்டும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும், அதன்படி நேற்று இரவில் எட்டயபுரத்தில் இருந்து சிந்தலக்கரை உள்ள பகுதியில் ரோந்து போலீசார் பணியில் ஈடுபட்டனர், இந்த் குழுவில் சப் இன்ஸ்பெக்டர் மாதவராஜா, போலீஸ்காரர்கள்  அற்புதசாமி, அருண்குமார், ராஜா, கார்த்திக் ஆகியோர் சென்றனர் அதிகாலை நேரத்தில் ரோந்து வாகனம் சிந்தலக்கரை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியை சுற்றி ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் சேகரிக்க 72 பேட்டரி வாகனங்கள்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சி பகுதிகள் வேகமாக முன்னேறி வருகின்றன, வீடுகள் பெருகி வரும் நிலையில அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. இதை தொடர்ந்து  ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குப்பைகள் சேகரிக்க  72 பேட்டரி வாகனங்கள் வழங்க முடிவு செய்யப்படடு முதற்கட்டமாக நவீன வசதிகள் கொண்ட 30 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தூய்மை பணிகளை […]

கோவில்பட்டி

பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கு போதையில் வந்த மாணவர்களை தலைமையாசிரியரிடம் அழைத்து செல்ல முயன்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சண்முகசுந்தரம் போதையில் வந்த மாணவர்கள் மதுபாட்டிலால் தாக்கி படுகாயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதையடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் எதிரில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் […]

தூத்துக்குடி

டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2, 2 ஏ  முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 595 காலிப் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2, 2 ஏ  முதல்நிலை தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த .என்.பி.எஸ்.சி.குரூப் 2, 2 ஏ  முதல் நிலை தேர்வானது வரும்  28.9.2025   அன்று  நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு  விண்ணப்பிக்கும் தேர்வர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இணையதளம் மூலம் விண்ணப்பிக்க  கடைசி நாள் 13.8.2025.  இந்த தேர்வுக்கு தயாராகும்  […]

கோவில்பட்டி

அரசு டிரைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு; பாதுகாப்பாக பஸ்சை  நிறுத்தி பயணிகளை காப்பாற்றினார்

கோவில்பட்டியில் இருந்து அகிலாண்டபுரம் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இன்று கா லை வழக்கம்போல கோவில்பட்டியில் இருந்து அகிலாண்டபுரத்திற்கு அரசு பஸ் சென்து. பஸ்சை  சிவகுருநாதன் என்பவர் ஓட்டினார். பிரபாகரன் என்பவர் கண்டக்டராக இருந்தார். அந்த  பஸ் அகிலாண்டபுரம் சென்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, கோவில்பட்டிக்கு மீண்டும் புறப்பட்டது. அந்த பஸ் தேசிய நெடுஞ் சாலை இருந்து வில்லிசேரி கிராமத்திற்குள் திரும்ப முயன்ற போது, ஓட்டுநர் சிவகுருநாதனுக்கு வ இடது கை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவில்பட்டியில் உள்ள உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி  மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா  நடைபெற்றது  விழாவில் சிறப்பு விருந்தினராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும், மனோ கல்லூரியின் இயக்குனருமான  வெளியப்பன்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். பல்கலைக்கழக அளவில் பதக்கம் வென்ற பட்டதாரிகள் மற்றும் கல்லூரி அளவில் முதல் இடம்  பெற்ற பட்டதாரிகள் கைகளில் வெற்றிக்கொடி ஏந்தி துறைத்தலைவர்களோடு அணிவகுத்து வந்தனர். விழாவிற்கு […]

தூத்துக்குடி

திடீர் நெஞ்சுவலி: மின்கம்பத்தில் மோதி பஸ்சை  நிறுத்திய டிரைவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு 7 மணியளவில் அரசுப் பஸ் செம்மறிக்குளம் நோக்கி  புறப்பட்டது. குலசேகரன்பட்டினம் வடக்கூரைச் சோ்ந்த ஜெயசிங் மகன் அல்டாப் (வயது 48) என்பவர் பஸ்சை ஓட்டினாா். அரசு மருத்துவமனையை தாண்டி பஸ் வந்த  போது டிரைவர் அல்டாப்புக்கு  திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவரது கட்டுப்பாட்டைவிட்டு பஸ் விலகியது. இதையடுத்து சாலை ஓரத்தில் இருந்த இருசக்கர வாகனத்திலும், நடந்து சென்ற வட மாநிலத் தொழிலாளி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 19-ம் தேதி  மின்தடை

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் எல்.ரவிராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் ஜூலை மாதத்திற்கான மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 19-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்சப்ளை தடை செய்யப்படும். அந்த இடங்கள் வருமாறு:- கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, […]