டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2, 2 ஏ முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 595 காலிப் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2, 2 ஏ முதல்நிலை தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த .என்.பி.எஸ்.சி.குரூப் 2, 2 ஏ முதல் நிலை தேர்வானது வரும் 28.9.2025 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 13.8.2025. இந்த தேர்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 25.7.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30. மணிக்கு தொடங்கப்படவுள்ளது.

திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Forms-ஐ
பூர்த்தி செய்து Submit செய்யவும்.
அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் அறிய 0461 2003251 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது,







