அரசு டிரைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு; பாதுகாப்பாக பஸ்சை நிறுத்தி பயணிகளை காப்பாற்றினார்
கோவில்பட்டியில் இருந்து அகிலாண்டபுரம் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இன்று கா லை வழக்கம்போல கோவில்பட்டியில் இருந்து அகிலாண்டபுரத்திற்கு அரசு பஸ் சென்து. பஸ்சை சிவகுருநாதன் என்பவர் ஓட்டினார். பிரபாகரன் என்பவர் கண்டக்டராக இருந்தார்.
அந்த பஸ் அகிலாண்டபுரம் சென்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, கோவில்பட்டிக்கு மீண்டும் புறப்பட்டது.

அந்த பஸ் தேசிய நெடுஞ் சாலை இருந்து வில்லிசேரி கிராமத்திற்குள் திரும்ப முயன்ற போது, ஓட்டுநர் சிவகுருநாதனுக்கு வ இடது கை திடீரென செயல் இழந்துவிட்டது, பஸ்ஸை தொடர்ந்து ஓட்டமுடியாமல் அவதிப்பட்ட அவர் நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி பயணிகளை காப்பாற்றினார்.

பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்கினார்கள்.ஒருவர் அந்த பஸ்சை சாலையோரம் ஓட்டிசென்று நிறுத்தினார். திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதும், பஸ்சை பாதுகாப்பாக நிறுத்தி பயணிகளை கீழே இறங்க செய்த டிரைவரின் செயலை அனைவரும் பாராட்டினார்கள்,.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் டிரைவர் சிவகுருநாதனை வில்லி சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.







