கோவில்பட்டியில் மோசமான மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி 20-வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு பஜாரில் உள்ள மோசமான மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அந்த மின்கம்பங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கிளைச் செயலாளர் செல்லையா தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், உதவி செயலாளர்கள் விஜயலட்சுமி, அலாவுதீன், இளைஞர் பெருமன்ற நகர குழு உறுப்பினர் விநாயகா மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டு மோசமான நிலையில் காணப்படும் மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.








