வைகோ மீது சாதி முலாம் பூசும் தீய சக்திகள்; மதிமுக இளைஞர் அணி கூட்டத்தில் கண்டன தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இளைஞர் அணி சங்கொலி சந்தா வழங்குதல், மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் கூட்டம் மற்றும் தலைமைக் கழகம் தாயகத்தில் மாநில இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது.
மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ச.இசக்கியப்பன், ஆர்.இரத்தினசாமி, அ.பெரியார், சி.பூப்பாண்டி, மு.மாரிமுருகன், ஜெ.சிவராமன், ப.தினேஷ், டி.கே.சரவணன், தமிழீழ சோமு, எம்.டி.சி. சங்கையா, பி.ஆர்.முருகன், டி.தியாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., சங்கொலி சந்தாக்களைப் பெற்றுக் கொண்டு, பாராட்டி சிறப்புரை ஆற்றினார். தி.மு.இராசேந்திரன் – கழக துணைப் பொதுச்செயலாளர் டி.சி. ராஜேந்திரன் – வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் கே. கழககுமார் – தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். சைதை. ப. சுப்பிரமணி – தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பூவை. மு. பாபு – திருவள்ளூர் மாவட்ட செயலாளர் உள்பட பலர் பேசினார்கள்..
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*செப்டம்பர் 15, திருச்சியில் நடைபெறும் பேரறிஞர் அண்ணாவின் 117ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தபட்சமாக 100 இளைஞர்களை மாநாட்டிற்கு அழைத்து வர வேண்டும்,.’

*திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், துரை வைகோவின் நாடாளுமன்ற உரைகள் நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. திருச்சி தொகுதி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, மக்கள் போற்றும் வகையில் செயலாற்றி வரும் துரை வைகோவுக்கு இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
*கழக பொதுச்செயலாளர் நேர்மைமிகு தலைவர் வைகோ பொதுவாழ்வில் சமூகநீதி கொள்கையையும், சாதி, சமயமற்ற சமத்துவத்தையும் உயிர்மூச்சாக கொண்டு இயங்கி வருகிறார். கட்சியினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து செல்பவர் என்பதை அரசியல் உலகு நன்கு அறியும். தலைவர் வைகோ அவர்கள் மீது சாதி முலாம் பூசும் தீய சக்திகளை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.,







