ரோந்து வாகனம் விபத்தில் சிக்கி போலீஸ்காரர் பலி; சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் காயம்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு போலீஸ் எல்லை பகுதியிலும் இரவு நேர ரோந்து போலீசுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு வாரமும் இந்த பட்டியல் மாற்றி அமைக்கபப்டும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்,

அதன்படி நேற்று இரவில் எட்டயபுரத்தில் இருந்து சிந்தலக்கரை உள்ள பகுதியில் ரோந்து போலீசார் பணியில் ஈடுபட்டனர், இந்த் குழுவில் சப் இன்ஸ்பெக்டர் மாதவராஜா, போலீஸ்காரர்கள் அற்புதசாமி, அருண்குமார், ராஜா, கார்த்திக் ஆகியோர் சென்றனர்

அதிகாலை நேரத்தில் ரோந்து வாகனம் சிந்தலக்கரை துரைச்சாமிபுரம் விலக்கு பகுதியில் சென்றபோது எதிர்பாரதவிதமாக தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனம் சேதம் அடைந்து இடிபாடுகளில் சிக்கி போலீஸ்காரர் அருண்குமார் இறந்து போனார்.
சப் இன்ஸ்பெக்டர் மாதவராஜ உள்பட 4.பேர் காயம் அடைந்தனர். அவர்கள் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், விபத்து தொடர்பாக விசாரணை நடக்கிறது.







