கோவில்பட்டியை சுற்றி ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் சேகரிக்க 72 பேட்டரி வாகனங்கள்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சி பகுதிகள் வேகமாக முன்னேறி வருகின்றன, வீடுகள் பெருகி வரும் நிலையில அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது.
இதை தொடர்ந்து ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குப்பைகள் சேகரிக்க 72 பேட்டரி வாகனங்கள் வழங்க முடிவு செய்யப்படடு முதற்கட்டமாக நவீன வசதிகள் கொண்ட 30 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தூய்மை பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15வது நிதிக்குழு மானியம் சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய 72 பேட்டரி வாகனங்கள் வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்கள் எளிதில் வாகனத்தினை ஓட்டும் வகையிலும், சின்ன தெருக்களுக்கு கூட செல்லும் வகையில் இந்த பேட்டரி வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு பேட்டரி வாகனத்தின் விலை 2லட்சத்து ரூ50 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

72 பேட்டரி வாகனங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 30 பேட்டரி வாகனங்kal கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பேட்டரி வாகனங்கள் விரைவில் ஊராட்சி களுக்கு வழங்கப்பட இருக்கிறது,
2வது கட்டமாக 42 பேட்டரி வாகனங்கள் வரவுள்ளதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.







