சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார் (வயது 27). நகைத்திருட்டு வழக்கு தொடர்பாக, அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், அவரை கடுமையாக தாக்கினர். இதில் மயங்கி விழுந்து அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இதில் தொடர்புடையதாக கூறப்படும் தனிப்படை போலீஸ்காரர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர். மேலும் […]
“ஓரணியில் தமிழ்நாடு”: ஓட்டப்பிடாரம் தொகுதியில் வீடு வீடாக சென்று திமுகவில் சேருமாறு கனிமொழி
திராவிட முன்னேற்றக் கழக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசார இயக்கத்தை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முடிவைத்தானேந்தல் ஊராட்சியில் “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் […]
கோவில்பட்டியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் ;முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்தார்
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சுப்பிரமணியபுரம் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாலமுருகன், மருத்துவர் உமாசெல்வி, நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ்,திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் அமலி பிரகாஷ், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், நகர […]
பன்னாட்டு ரோட்டரி சங்கம் (ரோட்டரி இண்டர்நேஷனல்) என்பது சமூக சேவையை நோக்கமாகக் கொண்ட ஒரு சங்கமாகும். உலகில் நல்லெண்ணம், அமைதி ஆகியவற்றை உருவாக்க உதவும் பொருட்டு வணிகர் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு மதச்சார்பற்ற, நிறம், இனம், மதம், பால், அரசியல் சார்பற்ற அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு திறந்த அமைப்பு ஆகும். முதன்மைக் குறிக்கோள் உலகம் முழுவதும் 34.282 சங்கங்களும், 1.2 மில்லியன் உறுப்பினர்களும் உள்ளனர். ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் `ரோட்ரியன்ஸ்” என்று அழைக்கப்படுகின்றனர். இதன் உறுப்பினர்கள் […]
படர்ந்தபுளி கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி தாலுகா தோணுகால் ஊராட்சி எல்லைக்குட்பட்ட படர்ந்தபுளி கிராமத்தில் உள்ள மயானத்தில் கொட்டகை மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும், புதிதாக தெருவிளக்கு அமைக்க வேண்டும், இடிந்த நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியை அகற்றி புதிதாக தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும் ஆகிய கோரிக்கைகைளை வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்து போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த முறை நடந்த காத்திருக்கும் போராட்டத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் எடுத்த முடிவுகள் […]
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார் (வயது 27). நகைத்திருட்டு வழக்கு தொடர்பாக, அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், அவரை கடுமையாக தாக்கினர். இதில் மயங்கி விழுந்து அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இதில் தொடர்புடையதாக கூறப்படும் தனிப்படை போலீஸ்காரர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர். மேலும் சிவகங்கை மாவட்ட […]
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமா மகேஸ்வரி. இவர் திமுகவைச் சேர்ந்தவர். அதிமுகவைச் சேர்ந்த கண்ணன் என்கிற ராஜூ துணைத்தலைவராக உள்ளார். உள்ளாட்சி தேர்தலில் உமா மகேஸ்வரியும், அதிமுக முத்துலட்சுமியும் தலா 15 வாக்குகள் பெற்றனர். சமநிலையில் இருந்ததால் குலுக்கல் முறையில் உமா மகேஸ்வரி தேர்வானார். அவர் நகர்மன்ற தலைவராக தேர்வானது முதற்கொண்டே அவருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது, இதனால் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது, […]
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜீத்குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தது மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் நிகிதா. இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் தற்போது எழுந்த வண்ணம் உள்ளன. அதாவது, நிகிதா போலீசில் தெரிவித்தது போல மருத்துவர் கிடையாது. பி.எச்.டி முடித்து அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றிய வெளியான தகவல்கள் வருமாறு:- \ மதுரை மாவட்டம் திருமங்கலம் […]
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் போது காவலர்கள் தாக்குதலில் அஜித்குமார் மரணமடைந்தார். இந்நிலையில் அஜித்குமாரின் தாயாரிடம் செல்போன் அழைப்பு மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது; துரதிர்ஷ்டவசமாக சில மனித மிருகங்கள் கடுமையாக தாக்கியதால் உங்கள் மகன் அஜித் குமார் உயிரிழந்திருக்கிறார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை, அதிமுக […]
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டதால் மரணம் அடைந்தார். இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோயில் […]







