கோவில்பட்டியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் ;முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்தார்

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து சுப்பிரமணியபுரம் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாலமுருகன், மருத்துவர் உமாசெல்வி, நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ்,திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் அமலி பிரகாஷ், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், நகர பொருளாளர் ராமமூர்த்தி,நகர்மன்ற உறுப்பினர்கள் கனகராஜ்,சுரேஷ், தவமணி, ஜேஸ்மின் லூர்துமேரி, லவராஜா, விஜயன், உலகராணி, கருப்பசாமி, சுதாகுமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







