கோவில்பட்டி ரோட்டரி சங்க 50-வது தலைவராக எஸ்.ராஜ்குமார் நியமனம்; நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா 8 -ந்தேதி நடக்கிறது

பன்னாட்டு ரோட்டரி சங்கம் (ரோட்டரி இண்டர்நேஷனல்) என்பது சமூக சேவையை நோக்கமாகக் கொண்ட ஒரு சங்கமாகும்.
உலகில் நல்லெண்ணம், அமைதி ஆகியவற்றை உருவாக்க உதவும் பொருட்டு வணிகர் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு மதச்சார்பற்ற, நிறம், இனம், மதம், பால், அரசியல் சார்பற்ற அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு திறந்த அமைப்பு ஆகும்.
முதன்மைக் குறிக்கோள்
உலகம் முழுவதும் 34.282 சங்கங்களும், 1.2 மில்லியன் உறுப்பினர்களும் உள்ளனர். ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் `ரோட்ரியன்ஸ்” என்று அழைக்கப்படுகின்றனர். இதன் உறுப்பினர்கள் பொதுவாக வாரத்திற்கு ஒரு நாள் சந்திக்கின்றனர் அச்சமயத்தில் தங்கள் சேவை, இலக்குகள், பணிகள் போன்றவற்றைப் பற்றி விவாதிக்கின்றனர்.
ரோட்டரியின் முதன்மைக் குறிக்கோள் “தன்னைவிட மேலானது சேவை” என்பது; அதன் இரண்டாம் பொன்மொழி, “மிகச்சிறந்த லாபம் என்பது சேவையே ஆகும்.” என்பதாகும்.
கோவில்பட்டி ரோட்டரி
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவு பெற்று 50-வது ஆண்டு தொடங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை புதிய நிர்வாகிகள் குழுவினர் சங்கத்தை வழிநடத்துவார்கள்.
அந்த வகையில் கடந்த ஆண்டு (2024-25) கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவராக கே,.தாமோதரக்கண்ணன், செயலாளராக பி.ராஜமாணிக்கம், இணை செயலாளராக பி.எம்.பழனிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி வகித்தனர்.

புதிய தலைவர் எஸ்.ராஜ்குமார்
இதை தொடர்ந்து ஜூலை 1 முதல் 2025-2026 ஆம் ஆண்டு கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தை வழிநடத்திட புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி ரோட்டரி சங்கத்தின் 50 வது தலைவராக எஸ்.ராஜ்குமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
மேலும் செயலாளராக பி.எம்.பழனிக்குமார்,பொருளாளராக கே.நாராயணசாமி, துணை தலைவரர்களாக பி.முத்துமுருகன், `மாடர்ன் ஹார்டுவேர்ஸ்’ டி.ரமேஷ்குமார், இணை செயலாளராக `டி.வி.எல்.எஸ்.பஸ் சர்வீஸ்’ எல்.ரத்தினகுமார், கிளப் கற்றல் உதவியாளராக(Club learning facilitator) ஆசியாபார்ம்ஸ் பாபு, சார்ஜென்ட்@ஆர்ம்ஸ் ஆக வி.இளங்கோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



மேலும் கிளப் சேர்மன்களாக எம்.வெங்கடேஷ், ஐ.ரவிமாணிக்கம், பி.டென்சிங்,எஸ்.செந்தில்குமார் உள்பட 38 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்
கிளப் ஆலோசனை குழுவில் ஆர்.எல்.டாகா, விநாயகா ஜி,ரமேஷ், கே.ஆர்..சீனிவாசன், பி.முத்துசெல்வன்,ரோஸ் ஆர்.,கருப்பசாமி, வி,.எஸ்.பாபு, டாக்டர் ஆர்,சம்பத்குமார், ஏ.ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்,
8-ந்தேதி பதவி ஏற்பு விழா
ரோட்டரி சங்க புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்புவிழா கோவில்பட்டி சவுபாக்யா மகாலில் 8-ந் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவுக்கு ரோட்டரி மாவட்ட கவர்னர் ஜே.தினேஷ்பாபு தலைமை தாங்குகிறார், அவர் புதிய தலைவர் எஸ்.,ராஜ்குமார் செயலாளர் பி.எம்.பழனிகுமார் மற்றும் நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்,
விழாவுக்கு ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ஜி,ரமேஷ் முன்னிலை வகிக்கிறார்.
புதிய உறுப்பினர்களை இணைத்து துணை ஆளுனர் இ.பரமேஸ்வரன் வாழ்த்துரை வழங்குகிறார். மேலும் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு சேர்மன் ஏ.ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி வாழ்த்துரை வழங்குகிறார்.

கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றியவர்
ரோட்டரி சங்க புதிய தலைவர் எஸ்.ராஜ்குமார் பி.பி.ஏ. இளங்கலைப் பட்டம், எம்..காம். முதுகலைப் பட்டம் பெற்றவர். மேலும் Higher Studies in Cooperative Management படித்து 2000-2003 வரை கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்.
பின்னர் தனது வணிக ஈடுபாடு காரணமாக பணியை ராஜினாமா செய்து விட்டு செய்துவிட்டு கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலைகளுக்கு தேவைப்படும் அட்டை மற்றும் பேப்பர்களை விற்கும் வியாபாரத்தை ஆரம்பித்தார்.
மேலும் வீடுகள் கட்டி விற்கும் கட்டுமான தொழிலும் ,செய்து வருகிறார்.. சிவகாசியில் பாலிப்ரொப்பிலீன் தயாரிப்பு ஆலை தொடங்கி நடத்தி வருகிறார்.,
சிறப்பு விருதுகள்
.2005ல், ஜே.சி.ஐ கோவில்பட்டியில் இணைந்த இவர் 2018 ஆம் ஆண்டு கோவில்பட்டி ஜே.சி.ஐ. தலைவராகவும், 2013 ஆம் ஆண்டு 8 மாவட்டங்ககளை அடக்கிய ஜே.சி.ஐ மண்டல துலணத் தலைவராகவும் பணியோற்றி சிறப்பு விருதுகளை பெற்று இருக்கிறார்.,
2024ம் ஆண்டு JC Alumni Club மண்டல துணை தலைவராக பணியோற்றினார். வாழும் கலை யோகா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், திருமலை நாயக்கர் கல்லூரி பொதுக்குழு உறுப்பினர் பதவி வகிக்கும் எஸ்.ராஜ்குமார், 2017-2018ல் ரோட்டரியில் இணைந்தார். Rotaract Chairman, Environment Chairman, Public Image Chairman போன்ற பதவிகள் வகித்து இருக்கிறார்
குடும்பம்
ராஜ்குமார் மனைவி ஆர்,கற்பகவள்ளி எம்.ஏ.பட்டதாரி. மகள் ரித்திகா சிவகோசி மெப்கோ கல்லூரியில் பி.இ. 4 ம் ஆண்டு படித்து வருகிறார்,. மகன் அபிஷேக் மேட்டுப்பாளையம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் CBSE 12ம் வகுப்பு படிக்கிறார்.







