• October 21, 2026

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித்குமார் தாயாரிடம் எடப்பாடி பழனிச்சாமி செல்போனில் பேசி ஆறுதல்

 உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித்குமார் தாயாரிடம் எடப்பாடி பழனிச்சாமி செல்போனில் பேசி ஆறுதல்

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். 

இந்த விசாரணையின் போது காவலர்கள் தாக்குதலில் அஜித்குமார் மரணமடைந்தார். இந்நிலையில் அஜித்குமாரின் தாயாரிடம் செல்போன் அழைப்பு மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது; துரதிர்ஷ்டவசமாக சில மனித மிருகங்கள் கடுமையாக தாக்கியதால் உங்கள் மகன் அஜித் குமார் உயிரிழந்திருக்கிறார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை, அதிமுக உங்களுக்கு துணை நிற்கும். நாங்களும் துணை நிற்போம். இது மீள முடியாத துயரம். ஒரு தாய் தன்னுடைய மகனை இழப்பது என்பது கொடுமையான விஷயம். இது யாராளும் மன்னிக்க முடியாதது.

பெற்ற தாய்க்கு மட்டுமே அதன் வலி தெரியும். உங்களுக்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. இருந்தாலும், நீங்கள் மனம் தளராமல் இருந்தால் தான் வீட்டில் உள்ளவர்களும் மன நிம்மதியுடன் இருப்பார்கள். நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். நீதிமன்றத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்படும். உங்களுக்கு நியாயம் கிடைக்கும். மனம் தளராமல் இருங்கள். எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *