சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலியல் கொடுமை செய்தார். இதுகுறித்து மறுநாள் கோட்டூர்புரம் போலீசில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். ஞானசேகரன் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் வரலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஐ.பி.எஸ். அதிகாரிகள் சினேகபிரியா, பிருந்தா, ஐமான் […]
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் கே. இராமசாமி பிறந்தநாள் கோப்பைக்கான மாநில அளவிலான சீனியர் ஆண்கள் சாம்பியன் போட்டி வருகிற 4 ந் தேதி முதல் 8 ந்தேதி வரை கோவில்பட்டியில் நடக்க உள்ளது. கே ஆர் கலைக்கல்லூரி மைதானம், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானம், கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானம் ஆகிய 3 இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளனமொத்தம் 33 அணிகள் […]
கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு வள்ளுவர் நகர் 1வது தெருவைச் சேர்ந்த பிரகதீஸ் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், பிரகதீசை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத பிரகதீஸ் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை ஓட விடாமல் இருவர் பிடித்துக் கொள்ள மற்றவர்களால் வெட்டப்பட்டார். இந்த காட்சியை கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் பதறிப் போனார்கள். இருந்தாலும் […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டி நேற்று இறுதிக்கட்டத்தை அடைந்தது. இரவு 7 மணிக்கு கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியை முன்னாள் இந்திய ஆக்கி வீரரும், அர்ஜுனா விருது பெற்றவருமான என். முகமது ரியாஸ் தொடங்கி வைத்தார் பரபரப்புடன் தொடங்கிய […]
டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது; திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
மதுரை உத்தங்குடியில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்க விட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது. இந்தி மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்துவிடுவார்கள். ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்ன என்றால், கழக நிர்வாகிகளை தொகுதி வாரியாக, […]
கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடின. எ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரித்து அணிகள் […]
கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கல்வி வளம் சிறக்கவும், மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கொரானா கொடிய நோய் மீண்டும் பரவாமல் தடுக்கவும் கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி. ஆர்.முருகன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.சக்தி கொடியை மன்ற தலைவர் அப்பாசாமி ஏற்றிவைத்தார். தொடர்ந்து அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் […]
மதுரையை அடுத்த உத்தங்குடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில், கலைஞர் அறிவாலயம் முகப்பு தோற்றத்துடன் கூடிய பொதுக்குழு கூட்ட திடலின் முன்பாக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். பின்னர் சரியாக 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. முன்னதாக கூட்டத்தில் 3 ஆயிரத்து 400 பொதுக்குழு உறுப்பினர்கள், தி.மு.க.வின் அமைப்பு ரீதியிலான 23 அணிகளின் நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வின் நிர்வாக […]
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பற்றி தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்ச்சித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது […]
`வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடிபோம்’; திமுக பொதுக்குழு தீர்மானங்கள் விவரம்
திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவை? – முழு விவரம் மதுரை மாவட்டம் உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானங்கள் விவரம்: வருமாறு:-*கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம். *மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகள். *இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை […]







