• June 3, 2025

`வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடிபோம்’; திமுக பொதுக்குழு தீர்மானங்கள் விவரம்

 `வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடிபோம்’; திமுக பொதுக்குழு தீர்மானங்கள் விவரம்

திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவை? – முழு விவரம்

மதுரை மாவட்டம் உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

தீர்மானங்கள் விவரம்: வருமாறு:-
*கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்.

*மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகள்.

*இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு
*உழவர்கள் – நெசவாளர்கள் – மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம்

*தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் திமுக அரசுக்கு பாராட்டு
*ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்


*ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்
*
தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம்

*தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக.
*கீழடி ஆய்வை மறுககும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்.
*ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.
*சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இஸ்லாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக.
*
மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்.

*மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அநீதிகள்
*மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக. *சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக.

*தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது
*
கவர்னரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்குக் காரணமான திமுக தலைவருக்குப் பாராட்டு
*துணை ஜனாதிபதியின் விமர்சனத்திற்குக் கண்டனம்

*அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் சுப்ரீம் கோர்ட்டோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்
*சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக. *மலரட்டும் மாநில சுயாட்சி.

*பேரிடர் மீட்புப் பணியில் திமுக அரசுடன் திமுகவினரும் துணை நிற்போம்

*எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்
*அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு
*வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடித்து 2026-இல் திமுக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *