• October 21, 2026

Month: June 2025

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கருணாநிதி 102 வது பிறந்த நாள் விழா

கோவில்பட்டி நகர திமுக சார்பில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் விழா நடந்தது. பேருந்து நிலையம் அருகே நடந்த விழாவில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் திமுக நகர செயலாளருமான கருணாநிதி தலைமை தாங்கி,  கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு வேஷ்டி – சேலை, இனிப்பு மற்றும் உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர்,சிவா,நகர அவைத் […]

சினிமா

கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை; கர்நாடக பிலிம் சேம்பர் தலைவருக்கு கமல்ஹாசன்

மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகி உள்ள, தக் லைப் திரைப்படம், வரும் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சென்னையில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், ‘தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்’ என்றார். இதற்கு கர்நாடகா முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. ‘கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கன்னட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், நடிகர் கமல், ‘மன்னிப்பு கேட்க முடியாது’ என கூறிவிட்டார். கர்நாடகாவில் கமல் படங்களுக்கு தடை […]

செய்திகள்

நீங்கள் வரலாற்று ஆய்வாளரா? கமல்ஹாசனுக்கு கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி

நடிகர் கமல்ஹாசன் ‘தக் லைப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம், நாளை மறுநாள் (5-ந்தேதி) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி’ என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கர்நாடக அரசியல்வாதிகள், கன்னட அமைப்புகள், கன்னட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். […]

கோவில்பட்டி

102 மாணவர்களுக்கு கருணாநிதி உரை எழுதிய திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கிய திமுகவினர்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  102 வது பிறந்தநாள் விழா  தமிழகம் முழுவதும் இன்று  கொண்டாடப்பட்டு வருகிறது செம்மொழி நாளாக கொண்டாடப்படும் இந்நாளில் திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி  பிரகாஷ் தலைமையில் கோவில்பட்டி  22 வது  வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி ஏற்பாட்டில்  பங்களா தெருவில் அமைக்கப்பட்டிருந்த கலைஞரின்  உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து  பள்ளி கல்லூரி மாணவ […]

செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசு விதித்த நேர கட்டுப்பாடு செல்லும்;ஐகோர்ட்டு

தமிழக சட்டசபையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்காக தமிழக ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக விதிமுறைகள் இயற்றப்பட்டு கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.  இந்த ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஆதார் எண்ணை இணைத்ததுடன் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து […]

சினிமா

விஜய்யின் கடைசி படம்: ‘ஜன நாயகன்’ படப்பிடிப்பு நிறைவு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. ‘ஜன நாயகன்’ படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் […]

செய்திகள்

102-வது பிறந்தநாள்: கருணாநிதி சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் இன்று செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். கருணாநிதியின் 102-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மலர்தூவி வணங்கினார். அவருடன் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், நிர்வாகிகள் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (2.6.2025) நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 472 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.  பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 36 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு […]

கோவில்பட்டி

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கடந்த ஆண்டு பெய்த பெருமழையில் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு அரசு அறிவித்த வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தி இன்று கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெள்ளத்துரை பாண்டி, அவைத்தலைவர் வெங்கடசாமி, மாவட்ட துணைத் தலைவர் சாமியா, ஓட்டப்பிடாரம் வட்டாரத் தலைவர் தொப்பத்துரை மற்றும் […]

சினிமா

மத யானைக் கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்

இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விக்ரம் சுகுமாரன். ‘ஆடுகளம்’ படத்தில்  வெற்றிமாறனுக்கு துணையாக இருந்தார். அதனை தொடர்ந்து, ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் விக்ரம் சுகுமாரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின், 6 ஆண்டுகள் கழித்து நடிகர் சாந்தனுவை வைத்து ‘ராவணக்கோட்டம்’ என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில், நேற்று மதுரைக்குச் சென்று தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்துக்கான கதையை சொல்லிவிட்டு பேருந்தில் ஊர் திரும்பும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு […]