அமெரிக்க அதிபராக இரண்டாவது வது முறையாகப் பதவிஏற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் டாஜ் துறையில் தலைமை ஆலோசகராக உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநருமான எலான் மஸ்க்கை நியமித்தார். இவருடைய ஆலோசனையின் பேரில், ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சிலவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி திட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து […]
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியினருக்கு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர் இந்த துயர சம்பவத்துக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததும், அவசரம், […]
தமிழக வெற்றிக்கழகம் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதனிடையே விஜய் நடித்து வரும் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. எனவே இனி முழு வீச்சில் தமிழகம் முழுவதும் கட்சி வளர்ச்சி பணிகளை முன்னெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 10 மாதங்களே இருப்பதால், மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்துவதற்கான பணிகளில் விஜய் இறங்கி இருக்கிறார். இதற்கான வழித்தட அமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 42 நாட்கள் தொடர் மக்கள் […]
தமிழகத்தில் 2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு இப்போதே அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த சட்டசபை (2021) தேர்தலில் இதே கூட்டணியில் பா.ம.க.வும் இடம் பெற்றிருந்தது. ஆனால், தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே இருந்த முரண்பாடு சமீபத்தில் மோதலாக வெடித்தது. இந்த நிலையில், இன்று காலை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்ற அன்புமணி, தனது தந்தை ராமதாசை சந்தித்து பேசினார். […]
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியரான அன்புச் செழியனிடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை அவருக்காக லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இதையொட்டி நடிகர் விஷாலும், லைகா நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதாவது, கடன் தொகை முழுவதையும் திருப்பிச்செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் […]
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் 3 மைதானங்களில் நடந்து வருகிறது இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் போட்டியாக தூத்துக்குடி மாவட்ட அணி 2-0 என்று கோல் கணக்கில் வேலூர் மாவட்ட அணியை தோற்கடித்தது. தூத்துக்குடி மாவட்ட அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். அடுத்து திருநெல்வேலி மாவட்ட அணி திருப்பூர் மாவட்ட அணியை வீழ்த்தி வெற்றி […]
நாடு முழுவதும் ஜூன் 5 ம் தேதி(இன்று) சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சுற்றுச்சூழல் தொடர்பாக நடந்த கலை இலக்கிய போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ரெயில் […]
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி 102 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக,மற்றும் திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை , நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின. கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமை திமுக மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் தொடங்கி வைத்தார்.திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,அரசு வழக்கறிஞர் […]
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே காந்தி மண்டபத்தில் மே 21 தொடங்கிய புத்தக கண்காட்சி ஜூன் 9 வரை நடக்கிறது. வருகிறது. ஒவ்வொரு நாளும் ஓவியம்,கட்டுரை,உள்ளிட்ட கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடந்த வான் நோக்குதல் நிகழ்வில் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த வாசகர்கள் டெலஸ்கோப்பில் நிலாவை பார்வையிட ஏற்பாடு செய்யபப்ட்டது. தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப்,தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்வில் […]
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று விளையாடின. இதில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதை தொடர்ந்து நேற்று மாலை , பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 11 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது. இதுபற்றி […]







