• June 8, 2025

Month: October 2024

செய்திகள்

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்

23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். இந்நிலையில் தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடக்கின்றன. இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில், இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா-பொலிவியா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா […]

செய்திகள்

20-ஓவர் கிரிக்கெட் போட்டி: இலங்கையின் பந்து வீச்சில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது .இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை […]

செய்திகள்

சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் நேற்று முதல் பெய்துவரும் கனமழையால் நகரம் இயல்புநிலையை இழந்து, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை இருக்கிறது. சாலைகள், சுரங்கப்பாதைகள் மூழ்கியுள்ளன. கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முக்கிய சேவைத்துறைகளை தவிர, பிற அரசு துறைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் உணவு இலவசமாக […]

தூத்துக்குடி

பொது விநியோகத் திட்ட ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய 19 ம் தேதி

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 19ம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில கூறப்பட்டு இருப்பதாவது:-  “பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு முகாம் 19.10.2024 அன்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற […]

செய்திகள்

சென்னையில் வெள்ள நீரை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ்

சென்னையில் வெள்ள நீரை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அடுத்து வரும் மழைகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கைகள் வேண்டும். என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். அதில், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு குறிப்பிடும்படியாக மழை பெய்யாததாலும்,மாநகராட்சி சார்பில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாலும்.,சென்னை மாநகரின் முதன்மை சாலைகளில் நேற்று பகலில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்திருக்கிறது. அதனால் போக்குவரத்து ஒருபுறம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள […]

கோவில்பட்டி

தமிழ்நாடு டிராகன்ஸ் ஆக்கி அணிக்கு கோவில்பட்டி வீரர்கள் 2 பேர் ஏலத்தில் தேர்வு

ஹாக்கி இந்தியா லீக் போட்டி இந்தியாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிற டிசம்பர் மாதம் நடக்க உள்ளது இப் போட்டியில் 8 ஆண்கள் அணியும் 6 பெண்கள் அணியும் விளையாட உள்ளன ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு டிராகன்ஸ் என்ற பெயரில் தமிழகம் களம் காண உள்ளது. இந்த அணியை சார்லஸ் குரூப்ஸ் உரிமையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் , ப்ரோ கபடி, போன்று ஹாக்கி இந்தியா லீக் போட்டி நடத்தப்பட உள்ளது இப்போட்டி இளம் வீரர்கள் தங்களது […]

செய்திகள்

மசூதியில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிடுவது மத நம்பிக்கையை புண்படுத்தாது: கர்நாடக

கர்நாடக மாநிலத்தில் மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷங்களை எழுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி அத்துமீறி நுழைந்தது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்,மத நம்பிக்கையைப் புண்படுத்தியது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்டவற்றின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னதாக காவல்துறையினர் பதிவு செய்த புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் தெரியாத நபர்கள் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் 2 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதை […]

செய்திகள்

கனமழை எதிரொலி: சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முக்கிய சேவைத்துறைகளை தவிர, பிற அரசு துறைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று அக்டோபர் 16-ம் தேதி ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி, […]

சினிமா

கனமழை காரணமாக வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்ற நடிகர் ஸ்ரீமன்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் ஸ்ரீமன். வடக்கிழக்கு பருவ மழை நேற்று இரவு முதல் தொடங்கியது. தற்பொழுது சென்னையில் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு ரெட் அல்ர்ட் விடப்பட்ட நிலையில் சென்னையில் பல இடங்களிலும்.,சாலைகளிலும் மழைநீர் தேங்கி இருக்கிறது.தமிழக அரசு மழைநீரை வடிக்க முடிந்த வேலைகளை செய்து வருகின்றது. இந்நிலையில் டைரக்டர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டை காலி செய்து ஸ்ரீமன் அவரது நுங்கம்பாக்கம் வீட்டிற்கு மாறியுள்ளார். வெள்ளத்தை […]