• June 8, 2025

தமிழ்நாடு டிராகன்ஸ் ஆக்கி அணிக்கு கோவில்பட்டி வீரர்கள் 2 பேர் ஏலத்தில் தேர்வு

 தமிழ்நாடு டிராகன்ஸ் ஆக்கி அணிக்கு கோவில்பட்டி வீரர்கள் 2 பேர் ஏலத்தில்  தேர்வு

ஹாக்கி இந்தியா லீக் போட்டி இந்தியாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிற டிசம்பர் மாதம் நடக்க உள்ளது இப் போட்டியில் 8 ஆண்கள் அணியும் 6 பெண்கள் அணியும் விளையாட உள்ளன ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு டிராகன்ஸ் என்ற பெயரில் தமிழகம் களம் காண உள்ளது. இந்த அணியை சார்லஸ் குரூப்ஸ் உரிமையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் , ப்ரோ கபடி, போன்று ஹாக்கி இந்தியா லீக் போட்டி நடத்தப்பட உள்ளது இப்போட்டி இளம் வீரர்கள் தங்களது திறமைகளை  வெளிப்படுத்தி சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் தேடுவதற்கு நல்ல தளமாக அமையும். லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான வீரர்களை தேர்வு  செய்வதற்கான ஏலம் கடந்த மூன்று நாட்களாக நடந்தது.

தமிழ்நாடு டிராகன் அணிக்காக தமிழக வீரர்கள் 6 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவில்பட்டி  வீரர்கள் திலீபன் மற்றும் அருண் ஆகியோர் தேர்வாகியுள்ளனர் திலீபன் 5 லட்சம் ரூபாய்க்கும்  அருண் 3.6 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். திலீபன்  கூசாலிப்பட்டி  அசோக் நினைவு ஹாக்கி அணி வீரர் ஜூனியர் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி  முகாமில்  கலந்து கொண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பாக அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டியில் விளையாடி பதக்கம் பெற்றுள்ளார்.  கடந்த மாதம் டெல்லியில் உள்ள ஜிஎஸ்டி மத்திய அரசு பணியில் ஹாக்கி விளையாட்டின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்.

அருண் என்பவர் டாக்டர் அம்பேத்கார் ஹாக்கி அணி வீரர் தற்போது  ராமநாதபுரத்தில் உள்ள விளையாட்டு விடுதியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார் கடந்த ஆண்டு சப் ஜூனியர் தேசிய போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக சப் ஜூனியர் இந்திய பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருந்து வருகிறார்.

 தற்போது 2 வீரர்களும் தமிழ்நாடு டிராகன் அணிக்காக தேர்வு செய்யப்பட்டதை பாராட்டி  ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து போட்டியில் சிறப்பாக விளையாடி தமிழக டிராகன்ஸ் அணி வெற்றிவாகை சூட ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன் அருமை நாயகம், செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டி ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் ஈஸ்டர் ,தங்கராஜ், மாரியப்பன், பொன்ராஜ், அய்யாதுரை, முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின் அசோக் நினைவு ஆக்கி அணி செயலாளர் பெரியதுரை அம்பேத்கர் ஆக்கி அணியின் பொறுப்பாளர் மாயாண்டி முன்னாள் தேசிய வீரர் காளிதாஸ், உடற் கல்வி ஆசிரியர்கள் சுரேஷ்குமார், முருகன், கிருஷ்ணமூர்த்தி, சிவானந்த், ஆல்ட்ரின் அதிசயராஜ் , ராஜ மனோகர், மணிகண்டன், மனோஜ் குமார், வேல்முருகன், ஆகியோர் பாராட்டினர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *