பொது விநியோகத் திட்ட ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய 19 ம் தேதி சிறப்பு முகாம்

 பொது விநியோகத் திட்ட ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய 19 ம் தேதி சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 19ம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில கூறப்பட்டு இருப்பதாவது:-

 “பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு முகாம் 19.10.2024 அன்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல், போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.

 மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும்.

இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறவேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *