பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று (செவ்வாய்) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேத மங்கலத்துடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 22-ந்த்தேதி வரை திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. விழாவின் 9-வது நாளான 19-ந் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. அன்றைய மண்டகப்படிதாரர் வணிக வைசிய சங்கம்.விழாவின் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை 24 மணி நேரத்தில் 34.40 மி.மீ.மழை பெய்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு:-காயல்பட்டினம-விளாத்திகுளம்- 8காடல்குடி- 2சூரங்குடி- 1கோவில்பட்டி- 2கழுமலை- 10ஓட்டப்பிடாரம்- : 5கீழ ஈராட்சி- 2எட்டயபுரம்- 2.4
தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிகளை வெடிக்க கூடாது என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது.இந்நிலையில், இந்த […]
தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்ல ரெயில்களில் முன்பதிவு செய்து தயாராக உள்ளனர்.சிறப்பு ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடிச் செல்கிறார்கள். அரசு பஸ்களுக்கான முன்பதிவு கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் சொந்த ஊர்களுக்கு 21-ந்தேதியே (வெள்ளிக்கிழமை) பயணத்தை மேற்கொள்ள […]
நெகிழ்ச்சி சம்பவம்:தூத்துக்குடியை சேர்ந்த யாசகர், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல் பாண்டியன். யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் பூல் பாண்டியன் , யாசகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில், தனது சாப்பாடு செலவுக்கு போக மீதமுள்ள தொகையை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, இலங்கை தமிழர் நிவாரண நிதி, கொரோனா நிவாரண நிதி என பல்வேறு நிவாரண நிதிகளுக்கு 2010 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல்லை சுற்றியுள்ள […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.அப்போது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 320 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால் மழை […]
பிரபல இந்தி நடிகை நுபுர் அலங்கர். இவர் ராஜா ஜி, சாவரியா, சோனாலி கேபிள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சக்திமான் தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.இவரது கணவர் அலங்கார் ஸ்ரீவத்சவாவும் நடிகர். சுமார் 27 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்த நுபுர் அலங்காருக்கு 49 வயது ஆகிறது. சில மாதங்களுக்கு முன்பு நுபுர் அலங்கர் சினிமாவை விட்டு விலகி காவி உடை அணிந்து சன்னியாசியாக மாறினார்.சினிமாவில் இனிமேல் […]
நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது.வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறினார்களா விக்னேஷ் சிவன்-நயன் தம்பதி என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.திருமணமான 4 மாதங்களில் நயன்- விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகள் எப்படி? என கேள்விகளை தொடுத்து வருகின்றனர். விதிகளை மீறி, வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றதாக […]
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சிவஞானபுரம் கிராமத்துக்கு இன்று காலை 8.25 மணி அளவில் அரசு டவுண் பஸ் புறப்பட்டு சென்றது.பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் மாதாங்கோவில், கிருஷ்ணன்கோவில் தெருக்கள் சந்திக்கும் இடத்தை தாண்டியவுடன் திடீர் கோளாறு ஏற்பட்டது. பஸ்சின் ஸ்டியரிங் பாக்ஸ் உடைந்து பஸ் நகரமுடியாமல் நின்று விட்டது.முக்கிய சந்திப்பான இந்த இடத்தில் காலை நேரத்த்தில் வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு போக்குவரத்து போலீஸ்காரர்கள் இருப்பார்கள். அவர்கள் பஸ் பழுதாகி நின்றவுடன் போக்குவரத்தை […]
காலண்டர் ஓவியர்களுக்கு முன்னோடியாக திகழும் ஓவியர் கொண்டையராஜ் நினைவாக, சித்திரம் கலைக்கூடத்தின் சார்பில் ஓவிய கண்காட்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், நடந்தது.கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, ஷன்மதி மற்றும் ரித்தீஷ் ராம், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ,ஓவியர் கார்த்திகைசெல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.ஓவியர் எஸ்.கார்த்திகை செல்வத்தின் ‘ஓவிய மாமேதை கொண்டையராஜு: […]







