தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ. லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது :- தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (6.1.2024) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.மருதூர் மற்றும் ஸ்ரீ வைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்ககூடாது. மேலும் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் […]
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் ஆன்சைட் அருங்காட்சியகம் பெரு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்தன. வெள்ள நீர் அகற்றப்பட்டு,சீரமைத்து மீண்டும் பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் பார்வைக்கு திறக்கப்பட்டது. இன்று (4/1/2024) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி அருகே மேலமருதூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக குளம் நிரம்பி உள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அதில் குளித்து வருகின்றனர். நேற்று மேலமருதூர் கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மேனகா மற்றும் இளம்பெண் கலைச்செல்வி கல்லூரி மாணவி கனிச்செல்வி ஆகியோர் குளத்திற்கு குளிக்க சென்றனர். இதில் மேனகா குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதை பார்த்த கலைச்செல்வி மற்றும் கனிச்செல்வி […]
தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அகில இந்திய சிம்பு தலைமை ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் டி.ராஜேந்தர் நற்பணி மன்றம் சார்பில் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி சிவந்தாகுளம் பகுதியில் இன்று நடைபெற்றது. நடிகர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு, வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்த மன்ற நிர்வாகிகள் அவரை ஆசுவாசப்படுத்தினர். சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பினார். இதனால் சிறிது நேரம் பதற்றம் […]
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரண தொகை அறிவித்து வழங்கி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார். இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள கே.டி.சி.நகர் தனியார் திருமண […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்ட TNPSC பயிற்சி வகுப்புகள் மற்றும் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரடைந்ததால் தன்னார்வ பயிலும் வட்ட TNPSC பயிற்சி வகுப்புகள் 2.1.2024 முதல் நடைபெறும். தன்னார்வ பயிலும் வட்ட நூலகமும் 2.1.24 முதல் செயல்பட தொடங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சில பகுதிகளில் குடியிருப்பின் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாக மிகக்கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.6000 நிவாரணத் தொகை, 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். மேலும் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்படும் […]
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள வானிலை அறிவிப்பின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 30, 31- மற்றும் ஜனவரி 1 ஆகிய 3 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த அதீத கனமழை காரணமாக தாமிரபரணி ஆறு மற்றும் நீர் நிலைகளில் அதிக நீர் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு […]
தூத்துக்குடி மாவட்ட புதிய கூடுதல் கலெக்டராக (ஊரக வளர்ச்சி முகமை) ஐஸ்வர்யா ராமநாதன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். சிறு வயதில் இருந்து ஐ.ஏ.எஸ். பணி மீது ஆர்வம் கொண்டு படித்து தனது ஆசையை நிறைவேற்றியவர். பண்ருட்டி அருகே மருவூர் கிராமத்தை சேர்ந்த ராமநாதன்-இளவரசி தம்பதியரின் மகள். இவருக்கு ஒரு தம்பி மற்றும் ஒரு அக்காள் உண்டு. தந்தை ராமநாதன் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். தாயார் இளவரசிக்கு சிறுவயதில் திருமணம் முடிந்துவிட்டதால், திருமணத்துக்கு பிறகு படித்து பட்டதாரி அரசு பணிக்கான […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







