தூத்துக்குடி மாவட்டத்தில் 30,31,1-ந்தேதிகளில் மழை: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
![தூத்துக்குடி மாவட்டத்தில் 30,31,1-ந்தேதிகளில் மழை: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை](https://tn96news.com/wp-content/uploads/2023/12/89d6e6a2-ce68-47aa-9c75-06253ea2bab8-850x560.jpeg)
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள வானிலை அறிவிப்பின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 30, 31- மற்றும் ஜனவரி 1 ஆகிய 3 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த அதீத கனமழை காரணமாக தாமிரபரணி ஆறு மற்றும் நீர் நிலைகளில் அதிக நீர் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.
பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்லவேண்டாம். கால்நடைகள் நீர்நிலைகளில் இறங்காதவாறு பார்த்துக்கொள்ளளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் கருவிகள் மற்றும் மோட்டார் பம்புகள் போன்ற பொருட்களை தயார் நிலையில் வைத்திடவும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்க்திடவும் தக்க முன் ஏற்பாடுகள் செய்யவும் அனைத்து துறை அலுவலர்களும் அறிவுறுத்த ப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் கோ.லட்சுமிபதி கூறி இருக்கிறார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)