கோவில்பட்டி சுரங்க பாலத்தின் சர்வீஸ் ரோடு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்றும் நடந்தது
![கோவில்பட்டி சுரங்க பாலத்தின் சர்வீஸ் ரோடு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்றும் நடந்தது](https://tn96news.com/wp-content/uploads/2023/12/IMG20231228173642-850x560.jpg)
கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சாலை அமைக்க கோரி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட தொடங்கினர். பாலத்தின் இருவரமும் அகற்ற வேண்டிய 90 ஆக்கிரமிப்புகளில் 57 ஆக்கிரமிப்புகள் ஏற்கனவே துறை மூலம் அல்லது பட்டாதாரர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றி விட்டனர்.
மீதமுள்ள 33 ஆக்கிரமிப்புகளில் 13 ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது .
இதனால் மீதி இருக்கும் 20 ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தாசில்தார் லெனின் உத்தரவின் பேரில் நபார்டு நெடுஞ்சாலை துறையினருக்கு அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து நேற்று இந்த பணி தொடங்கியது. மதியம் வரை இப்பணி நீடித்தது.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/12/IMG20231228173555-1024x768.jpg)
மாலை நேரத்தில் பாலத்தில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு மறுபடியும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நீடித்தது.
இன்று 2 வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. ஜேசிபி எந்திரங்கள் மூலம் கட்டிடங்கள் இடித்து தள்ளப்பட்டன.
ஏற்கனவே அகற்றப்பட்ட 57 கட்டிடங்களில் மீண்டும் படிக்கட்டு, சன்ஷைடு என மீண்டும் முளைத்த 16 ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட 36 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இன்று மாலையும் சுரங்க பாலத்தில் போக்குவரத்தை தடை செய்து விட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
இந்த பணியில் நபார்டு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கோவில்பட்டி கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்,காவல்துறையினர் ஈடுபட்டனர்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)