கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல், அரசு மரியாதையுடன் நாளை அடக்கம்
மரணம் அடைந்த தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் உடல் தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.தமிழ் நாடு முழுவதிலும் இருந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்து வருகிறது. நாளை காலையில் இருந்து கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதால் தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
இதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது . இதயத்தொடர்ந்து அங்கு ஏற்பாடுகள் விமானமாக நடைபெற்று வருகிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு விஜயகாந்த் உடல் தீவுதிடலுக்கு கொண்டு செல்லபட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும்.
அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி முடித்தவுடன் நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 4.45 மணியளவில் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக தேமுதிக கட்சி அலுவலகம் கொண்டு வரப்படுகிறது. விஜயகாந்த் இறுதி ஊர்வலத்திற்கு அரசு மரியாதை செய்யப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருப்பதால் அரசு மரியாதையுடன். தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.