இன்று மழை எச்சரிக்கை: பொதுமக்களுக்கு தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்
![இன்று மழை எச்சரிக்கை: பொதுமக்களுக்கு தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்](https://tn96news.com/wp-content/uploads/2023/12/89d6e6a2-ce68-47aa-9c75-06253ea2bab8-850x560.jpeg)
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ. லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது :-
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (6.1.2024) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.மருதூர் மற்றும் ஸ்ரீ வைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்ககூடாது.
மேலும் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)