மழையில் சேதம் அடைந்த நகராட்சி பள்ளியின் கழிவறை; பயன்படுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்கள்
![மழையில் சேதம் அடைந்த நகராட்சி பள்ளியின் கழிவறை; பயன்படுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்கள்](https://tn96news.com/wp-content/uploads/2024/01/IMG_20240105_173106-850x408.jpg)
கோவில்பட்டி புதுரோட்டில் நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது.
பழம்பெரும் பள்ளியான இங்கு 270 மாணவா், மாணவிகள் படிக்கின்றனா். 10 ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா்.
ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கென பள்ளி வளாகத்தில் 5 கழிப்பறைகள் உள்ளன. சமீபத்தில் பெய்த கனமழையில், கழிப்பறை சுற்று சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அதன்பிறகு இன்னும் அதனை சீரமைக்கவில்லை.
இதனால் கழிவறை திறந்தவெளியாக உள்ளது. எனவே மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள்.இந்த கழிப்பறையைச் சீரமைத்து தருமாறு, நகராட்சி நிா்வாகம் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா், பள்ளி மேலாண்மைக் குழுவினா் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனா்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)