உலக தற்கொலை தடுப்பு தினம் விழிப்புணர்வு பேரணி


கோவில்பட்டியில் அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட மனநல திட்டம் சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரியதர்ஷினி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் விழிப்புணர்வு பேரணியை மருத்துவர் அனுஜா ஜஸ்டின் கொடியசைத்து தொட க்கி வைத்தார்.
மருத்துவர் மோசஸ்பால், மனநல மருத்துவர் ஜோஸ்வா, ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனர் தேன்ராஜா முன்னிலை வகித்தனர்.
பேரணி புது ரோடு வழியாக சென்று மீண்டும் மருத்துவமனை வந்து சேர்ந்தது. செல்பி ஸ்டாண்டில் அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற்றது. உளவியலாளர் சேது அனைவரையும் வரவேற்றார் .மாவட்ட மனநல திட்ட மருத்துவர் சோனா தற்கொலை தடுப்பு பற்றி சிறப்புரையாற்றினார் கோவில்பட்டி அரசு கலை கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பரிமளா நர்சிங் கல்லூரி மாணவிகள் அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.பேச்சு போட்டி கட்டுரை போட்டி கவிதை போட்டி நடைபெற்றது.போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன்ராஜாவுக்கு மனநல துறையில் சிறப்பாக சேவை புரிந்ததற்காக இணை இயக்குநர் நலப்பணிகள் மருத்துவர் பிரியதர்ஷினி சேவை விருது வழங்கினார்.பயிற்சி மருத்துவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கினார் .கலந்து கொண்ட அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்து கொண்டனர். உறுதிமொழியை சமூக பணியாளர் பெரியசாமி வாசித்தார்.பணியாளர் செல்வகுமாரி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். அரசு கலை கல்லூரி நாட்டு நல திட்ட பணி பேராசிரியர் கலந்து கொண்டார். மனநல திட்ட மனநல மருத்துவர் ஜோஸ்வா நன்றி கூறினார்.







