கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாஷுடன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார் இந்நிலையில் தண்டபாணியின் மகன் சுபாஷ் அனுஷா என்ற பெண்ணை காதலித்தார்.. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த தண்டபாணி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.. மேலும் காதலை கைவிடும்படி சுபாஷிடம் கூறி வந்தார்.இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ், […]
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்துக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, கிழக்குக்கடற்கரை எல்லையான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஏப்ரல் 15-ந்தேதி(இன்று) முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும், மேற்குக்கடற்கரை எல்லையான கன்னியாகுமரி முதல் நீரோடி வரை ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை (61 நாட்கள்) […]
. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் கொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடி. ஆகும். பாபநாசம் அணையிலிருந்து கிடைக்கும் தண்ணீர்ல் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணையில் பருவமழை காலங்களில் தண்ணீர் பெருகி கடல்போல் காட்சியளிக்கும். இந்த அணை நிரம்பி வழிந்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார், பிசான சாகுபடி நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் ஏற்படும். இதுபோல் […]
தந்தை- மகன் புகழ் பாடும் மன்றமாக சட்டப்பேரவையை மாற்றிவிட்டார்கள்; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னை ராயபுரத்தில் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், வழக்கறிஞர் எம்..எம்..கோபி ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கலந்து கொண்டு பாதசாரிகளுக்கு நீர் மோர் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் மறுக்கப்படுகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் பேசுவதை நேரலை கொடுக்காமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் ஆட்சி என்றால் […]
ஓ.பன்னீர்செல்வத்தின் திருச்சி மாநாடு: ரூ.200 கோடி கருப்பு பணம் வெளியே வரப்போகிறது-டி.ஜெயக்குமார்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இரட்டை தலைமை வேண்டாம் ஒற்றை தலைமையால் கட்சியை வளர்க்க முடியும் என்ற நிலை எடுக்கப்பட்டது. ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து இன்னும் சீரான நிலையை எட்டவில்லை;. எடப்பாடி பழனிசாமி -ஒ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் அவரது […]
ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்ககோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் அமளி
தமிழ்நாடு சட்டசபையில் சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த உடன் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்ய இருந்தார்,. இதற்கிடையே எதிர்க்கட்சி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கக்கோரி அ.தி.மு..க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தை முதலில் நிறைவேற்றும்படி சபாநாயகரிடம் அதிமுகவினர் முறையிட்டனர். அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனிதீர்மானத்தை இன்று நிறைவேற்றிவிட்டு நாளை […]
கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். முதல்-அமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். தமிழ்நாடு கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசு தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் சட்டப்பேரவையில் உள்ள கவர்னர் தொடர்பான சில பதங்களை நிறுத்திவைத்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கவர்னருக்கு எதிரான தீர்மானத்துக்கு நான்கில் மூன்று பங்கு ஆதரவு வேண்டும் என்பதால், சட்டப்பேரவையின் கதவுகள் மூடப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது…! […]
மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயம்-பொது இடங்களில் கட்டாயமில்லை; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் மருத்துவ முகாமை இன்று காலை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் பொது கூறியதாவது:- தமிழகத்தில் பிரதமர் காப்பீட்டு திட்டம், முதல் அமைச்சர் காப்பீட்டு திட்டம் என இரண்டு திட்டங்களும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழக்த்தில் ஏறக்குறைய 1,800 மருத்துவமனைகள் இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியும்,மக்கள் நல்வாழ்வுத்துறையும் […]
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்த ஆண்டு இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 36 பெரும் தென்காசி மாவட்டத்தில் 20 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 53 பேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பேர் ஆக மொத்தம் திருநெல்வேலி சரகத்தில் 126 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். […]
மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது. ஜெயலலிதா வீடுகளில் நடத்திய சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்துகளை குவித்தது தெரியவந்தது. இதுகுறித்த வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 4 […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







