நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ,கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் பிரசாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-இசை இறைவனாக இளையராஜாவை பார்க்கிறோம். சச்சினுக்கு விருது தரும்போது இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில் எங்களுக்கு பெருமை தான்.திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும் ரஜினி, அஜித், நயன்தாரா வந்தாலும் விஜய்க்கு வரும் கூட்டத்தைவிட அதிக கூட்டம் வரும். இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் வந்த நிலை […]
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி கிராமங்களில் சில வாரங்களுக்கு முன்பு `உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடந்தன. இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள், கோரிக்கை மனுக்களை பெற்றனர். கடந்த மாதம் 29-ந்தேதி, திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட பல மனுக்கள் தண்ணீரில் மிதந்தன. இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதைதொடர்ந்து அப்போதைய தாசில்தார் விஜயகுமார், திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், கடந்த மாதம் […]
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளம் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் விவேகானந்த கேந்திரம் இணைந்து உலக சகோதரத்துவ தின விழா நடத்தின, நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் விஜயன் தலைமை தாங்கினார்.கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி முன்னிலை வகித்தார். கோவில்பட்டி விவேகானந்த கேந்திரம் ஒருங்கிணைப்பாளர் பரமகுரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விவேகானந்தரின் சிந்தனைகள், சகோதரத்துவத்தின் மகத்துவம் மற்றும் இளைஞர்கள் சமூகத்தில் வகிக்க வேண்டிய பங்கு குறித்து உரையாற்றினார். பேராசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்க தன்னார்வத் […]
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார். அவர் டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார். விஜய் பிரசாரத்திற்காக நவீன பஸ்சை பயன்படுத்துகிறார், இந்த பஸ்சின் ஒரு பகுதியில் உங்க விஜய் நான் வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது லோகோ அச்சிடப்பட்டுள்ளது,.இந்த பஸ்சில் தொண்டர்கள் யாரும் ஏறி விடாதபடி இரும்பு வேலிகள் பஸ்சின் மேல் பகுதியில் […]
நாகர்கோவில் வடசேரியில் உள்ள ரவிவர்மன் புதுத்தெருவில் கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்த கதிரவன் (வயது45) என்பவர் மருந்து கட்டுப்பாடு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரை பூதப்பாண்டியை சேர்ந்த ஹரிஹரன் சந்தித்து, திட்டுவிளையில் புதிதாக மருந்தகம் திறப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு கதிரவன் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கூறினார். இதற்கு முதலில் சம்மதம் தெரிவிப்பதாக […]
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை, ஆறுமுகமங்கலம் கிராமத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத், மாநில செயலா் சண்முகம் ஆகியோா் சந்தித்து ஆறுதல் கூறினா். பின்னா், பிருந்தா காரத் செய்தியாளா்களிடம் கூறியதாவது: -‘ கவின் செல்வகணேஷ் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவிற்கே அவமானம். இது, ஜாதி சாா்ந்த விஷயங்களில் இந்தியாவின் தற்போதைய உண்மையான நிலையைக் காட்டுகிறது. திமுக அரசு கவின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும். இழப்பீடு மட்டும் ஆணவக் […]
நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் புதிய பொறுப்பாளர் நியமனம் செய்ய கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது 13.9.2025 சனிக்கிழமை அன்று கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள லட்சுமி மஹாலில் காலை 10 மணிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழிகாட்டுதலின் பேரில் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நெல்லை சிவக்குமார் , மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மற்றும் தூத்துக்குடி ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெறுகிறது, இந்த கூட்டத்திற்கு அனைத்து கிளை […]
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க நமது ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000-க்கும் அதிகமான பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழி:தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினரும் சேர்ந்து, ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ என உறுதி ஏற்கிறோம்!நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற […]
திருநெல்வேலி மாவட்டம், தென்னிமலையைச் சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 38) என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு களக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இந்த செயலுக்கு அந்த சிறுமியின் தாயார் மல்காமால்(35) உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, கோடீஸ்வரன்(38) மற்றும் மல்காமால் ஆகிய 2 பேரையும் கைது […]
தவெக தலைவர் விஜய், 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். இதற்கான அனுமதி கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விண்ணப்பித்திருந்தார். ஆனால், விஜயின் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து விஜயின் சுற்றுப்பயணத்துக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் விஜயின் சுற்றுப்பயண பற்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது,. அதன் விபரம் வருமாறு; 13-9-2025 […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







