கோவில்பட்டி கல்லூரியில் உலக சகோதரத்துவ தின விழா
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளம் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் விவேகானந்த கேந்திரம் இணைந்து உலக சகோதரத்துவ தின விழா நடத்தின,
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் விஜயன் தலைமை தாங்கினார்.கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி முன்னிலை வகித்தார். கோவில்பட்டி விவேகானந்த கேந்திரம் ஒருங்கிணைப்பாளர் பரமகுரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விவேகானந்தரின் சிந்தனைகள், சகோதரத்துவத்தின் மகத்துவம் மற்றும் இளைஞர்கள் சமூகத்தில் வகிக்க வேண்டிய பங்கு குறித்து உரையாற்றினார்.

பேராசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்க தன்னார்வத் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் பாரதி, இளம் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் முத்துராஜா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.







