கோவில்பட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி புதிய பொறுப்பாளர் நியமன கூட்டம் 13 -ந்தேதி நடக்கிறது
நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் புதிய பொறுப்பாளர் நியமனம் செய்ய கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது
13.9.2025 சனிக்கிழமை அன்று கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள லட்சுமி மஹாலில் காலை 10 மணிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழிகாட்டுதலின் பேரில் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நெல்லை சிவக்குமார் , மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மற்றும் தூத்துக்குடி ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெறுகிறது,

இந்த கூட்டத்திற்கு அனைத்து கிளை பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள், மேலும் அனைத்து பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.என்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி இரா.தங்க மாரியப்பன்.மு.அறி தெரிவித்து உள்ளார்.







