கோவில்பட்டியில் தபால் புக்கிங் நேரம் நீட்டிப்பு
கோவில்பட்டி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
உள்நாடு மற்றும் வெளிநாட்டு தபால்களை பொதுமக்களுக்கு குறைந்த செலவில் குறிபிட்ட நேரத்தில் சென்றடையும் வண்ணம் அஞ்சலகங்களில் பதிவு, விரைவு மற்றும் பார்சல் சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன,
பொதுமக்களுக்கு வசதியாக இந்த சேவை நேரத்தை குறிப்பிட்ட அஞ்சலகங்களில் நீட்டித்து வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி தலைமை அஞ்சலகம் மற்றும் தென்காசி ரெயில் நிலைய அஞ்சலகத்தில் மாலை 6.30 வரையிலும், கடையநல்லூர் துணை அஞ்சலகத்தில் மாலை 6 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த கால நீட்டிப்பு சேவையானது தேசிய அஞ்சல் வாரத்தில் கொண்டாடப்படும் மெயில்ஸ் மற்றும் பார்சல் தினமான 12.10.22 லிருந்து அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை பெற்று பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







