தூத்துக்குடியில் ரெயில்வே மேம்பாலம் பழுதுபார்ப்பு பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்
தூத்துக்குடி புது பஸ் நிலையம் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் கீதா ஜீவன் இன்று பார்வையிட்டார். அவருடன் அதிகாரிகள் சென்று இருந்தனர்.
2010-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக பள்ளி விடுமுறை நாட்களில் வேலை செய்வது என முடிவு செய்து அப்பணிகள் நடைபெற்று வந்தன.
11-ந்தேதி பணிகள் முடிந்து திறக்கப்படும் என்று அறிவிக்க்ப்பட்டிருந்த நிலையில் மேலும் சில நாட்கள் பணி நீட்டித்து தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் ரெயில்வே மேம்பாலம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.







