தேசியக்கொடியில் வாசகம் : அவமதிப்பு வழக்கில் ஆசிரியர் கைது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் எபின் (வயது 36). இவர் தாராபுரத்தில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து இல்லங்களிலும் தேசியக் கொடி ஏற்றி ஒற்றுமையை வகைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
அதன் அடிப்படையில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில் பள்ளி ஆசிரியர் தேசிய கொடியில் இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும் என சர்ச்சைக்குரிய வாசகம் எழுதி தேசிய கொடியை தனது வீட்டின் மொட்டைமாடியில் கட்டி பறக்க விட்டார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தாராபுரம் போலீசில் தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் தாராபுரம் காவல்துறை ஆய்வாளர் மணிகண்டன் அந்த ஆசிரியர் எபினை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அதன் பின்னர் ஆசிரியர் எபினை தேசியக்கொடி அவமதிப்பு குறித்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.







