அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொறுப்பு: கடம்பூர் ராஜூவுக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வான தூத்துக்குடி வடக்கு ,மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு அவரை கட்சியின் தற்காலிக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்திருக்கிறார்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கடம்பூர் ராஜு இன்று சென்னையில் இருந்து விமானம்மூலம் தூத்துக்குடி வந்தார்.
விமான நிலையத்தில் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோவில்பட்டி வந்தார். அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வந்தார், அங்கு கட்சி நிர்வாகிகள் கூடி இருந்து கடம்பூர் ராஜூவுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்,
