தமிழக அரசின் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை உருவாக்கிய கோவில்பட்டி மாணவிகள்
188 நாடுகள் பங்கேற்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடக்க இருக்கிறது. இப்போட்டி முதன் முதலாக இந்தியாவில் தமிழகத்தில் நடைபெற உள்ளது. எனவே பெருமைமிக்க இந்த விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு சின்னம் ( Emblem) உருவாக்கி அரசு பள்ளி மாணவர்களையும் அதில் கலந்து கொள்ள ஊக்குவிகிறது.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 700 மாணவிகளைக் கொண்டு செஸ் ஒலிம்பியாட் சின்னம் உருவாக்கினர். சீருடை அணிந்த மாணவிகள் ஒலிம்பியாட் சின்னம் போல் வடிவமைத்து நின்ற காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
இந்நிகழ்வில் கோவில்பட்டி – மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு வரவேற்புரை ஆற்றினார். தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயத பாணி தலைமை உரை ஆற்றினார். உதவி தலைமை ஆசிரியை உஷா ஜோஸ்பின் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் வேல்முருகன் மற்றும் உடற்கல்வி இயக்குநர் காளிராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.







