மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா 101 வது பிறந்தநாள்

சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா 101 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழுவின் சார்பாக சங்கரய்யா பிறந்தநாளை முன்னிட்டு
பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு எம் தேவேந்திரன் தலைமை தாங்கினார் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள் மணிகண்டன், விஜயராஜ் ,கயத்தார் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத் தலைவர் மோகன் தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
