தெப்பத்தேரோட்டம்: அலங்கார பந்தல் தீப்பிடித்து நாசம்

 தெப்பத்தேரோட்டம்: அலங்கார பந்தல் தீப்பிடித்து நாசம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித் திருவிழா கடந்த 3 -ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 -ம் நாள் திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய தெப்ப தேரோட்டம் நடைபெற இருந்தது. தெப்ப தேரோட்டத்தை காண சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
விழாவையொட்டி நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் கோவில் தென்புறத்தில் பட்டாசு வெடித்த போது அதிலிருந்து தீப்பொறி கோவில் முன்பு போடப்பட்டிருந்த கூரைப்பந்தலில் விழுந்தது. இதனால் தீ மளமளவென எரிந்தது. அலங்கார பந்தல் முற்றிலும் எரிந்து நாசமானது. இதைப்பார்த்ததும் தெப்பத்திருவிழாவை காண கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பெண்கள் கைக்குழந்தையுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புபடை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *