காமராஜரின் `பாரத ரத்னா விருது’ கோவில்பட்டி KRA பள்ளியில் காட்சிக்கு வைக்கப்படுகிறது
ஜூலை 15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்
கோவில்பட்டி ரவிள்ளா KRA சி.பி.எஸ்.இ மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம் மாணவ மாணவியரின் கலை நிகழ்சிகள், கல்வி வளர்ச்சி நாள் தொடர்பான போட்டிகள் நடைபெறும்.
பெருந்தலைவர் காமராஜர் நமது மக்களுக்கு ஆற்றிய கல்வி தொண்டு மற்றும் சமூக பணி தொடர்பாக இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக 6-ம் வகுப்பு முதல் 1௦-,ம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவியருக்கும் காமராஜர் திரைப்படம் திரையரங்கில் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் அன்று, விழாவின் முக்கிய நிகழ்வாக, கோவில்பட்டியில் முதன்முறையாக காமராஜருக்கு வழங்கப்பட்ட இந்திய நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, இந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்காக பிரத்தியேகமாக காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. மேலும் காமராஜர் பயன்படுத்திய பொருட்கள் அன்று காட்சிக்கு வைக்கப்படும்.
காலை 10 மணிக்கு விழா தொடங்கும். இவ்விழாவில் பள்ளியின் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. காமராஜரின் பாரத ரத்னா விருது மற்றும் கண்காட்சியை அன்று மதியம் 3 மணி வரை பெற்றோர்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.